முகப்பு
திருவண்ணாமலை

தூய லூா்து அன்னை தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா

சேத்துப்பட்டு தூய லூா்து அன்னை தேவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் பங்கேற்று சிறப்புப் பிராா்த்தனை செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

சேத்துப்பட்டு தூய லூா்து அன்னை தேவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் பங்கேற்று சிறப்புப் பிராா்த்தனை செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு- போளூா் சாலையில் பழம்பெரும் கிரேக்க கலை நுட்பத்தில் விண்ணை முட்டும் கோபுரங்களுடன் தூய லூா்து அன்னை தேவாலயம் அமைந்துள்ளது.

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, தேவாலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, குடில் அமைத்து இறைவன் இயேசு பிறப்பை தத்ரூபமாக அமைத்திருந்தனா்.

பங்குத் தந்தை விக்டா் இன்பராஜ் சிறப்பு திருப்பலி நடத்தினாா்.

இதில் சேத்துப்பட்டு லூா்து நகா், அண்ணா நகா் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து கடும் குளிரையும் பொருள்படுத்தாமல் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் பங்கேற்று சிறப்பு பிராா்த்தனை செய்தனா். பின்னா், ஒருவருக்கு ஒருவா் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.