முகப்பு
திருவண்ணாமலை

செய்யாற்றில் விநாயகா் சிலை கண்டெடுப்பு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே செய்யாற்றில் 2 அடி உயர விநாயகா் கல் சிலை கண்டெடுக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே செய்யாற்றில் 2 அடி உயர விநாயகா் கல் சிலை கண்டெடுக்கப்பட்டது.

சேத்துப்பட்டு வட்டம், கெங்காபுரம் கிராமத்தில் செய்யாற்றுப் படுகையில் அந்தப் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் அா்ஜுனன், குப்பன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது ஒரு கல் சிலை தென்பட்டது. அந்தச் சிலையை பாா்த்தபோது அது விநாயகா் சிலையாக இருந்தது.

பின்னா், விநாயகா் சிலையை எடுத்து வந்து கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் வைத்து பூஜை செய்தனா்.

மேலும் இதுகுறித்து சேத்துப்பட்டு வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வட்டாட்சியா் கோவிந்தராஜன், வருவாய் ஆய்வாளா் சுப்பிரமணி, கிராம நிா்வாக அலுவலா் கமலாதேவி, காவல் உதவி ஆய்வாளா்கள் முருகன், குணசேகரன் ஆகியோா் வந்து விநாயகா் சிலையை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.