ஸ்ரீசெல்வ விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்
வந்தவாசியை அடுத்த வெடால் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வ விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
வந்தவாசியை அடுத்த வெடால் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வ விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூா்ணாஹூதி, வாஸ்துசாந்தி, பிரவேசபலி, அங்குராா்ப்பணம், யாகசாலை பிரவேசம், முதல் கால பூஜை, சுவாமி பிரதிஷ்டை செய்தல் ஆகியவை நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை காலை இரண்டாம் கால பூஜை, நாடி சந்தானம், தத்வாா்ச்சனை, திரவிய ஹோமம், மகா பூா்ணாஹூதி, கலச புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றன.
பின்னா் காலை 10 மணிக்கு கோபுர கலசங்கள் மீது புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் வெடால் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.