தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டு முகப்பில் பெரியார் படம் அகற்றம்!
மதுரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டு முகப்பில் பெரியார் படம் அகற்றப்பட்டுள்ளது பற்றி...
மதுரையில் நாளை(மார்ச் 1) நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டின் நுழைவாயிலின் முகப்பில் பெரியார் படம் இடம்பெற்றிருந்த நிலையில் அது தற்போது நீக்கப்பட்டுள்ளது.
மதுரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டில் கலந்துகொள்ளவும் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்கவும் பிரதமர் மோடி இன்று(பிப். 28) இரவு சென்னை வரவுள்ளார்.
நாளை(மார்ச் 1) மாலை மதுரையில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள என்டிஏ மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டம் என்பதால் அனைத்து வசதிகளுடன் கூடிய பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மாநாட்டுக்கு பிரமாண்ட நுழைவுவாயில் அமைக்கப்பட்டுள்ளது. அலங்கார வளைவின் முகப்பில் பெரியார், அண்ணா படங்கள் இடம்பெற்றிருந்தன.
பெரியார் படம் குறித்து பேசப்பட்ட நிலையில் தற்போது முகப்பில் இருந்த பெரியாரின் படம் நீக்கப்பட்டுள்ளது.
பாஜக வலியுறுத்தியதால் அதிமுக, பெரியாரின் படத்தை நீக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.