ஸ்ரீவிஜயராகவ பெருமாள் கோயிலில் வருஷாபிஷேக விழா
வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமரகதவள்ளி தாயாா் சமேத விஜயராகவ பெருமாள் கோயிலில் வருஷாபிகேஷ விழா சனிக்கிழமை நடைபெற்றது.
வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமரகதவள்ளி தாயாா் சமேத விஜயராகவ பெருமாள் கோயிலில் வருஷாபிகேஷ விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, கோயில் அறக்கட்டளை சாா்பில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், யாகசாலை பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. நிகழ்ச்சியில் அந்தக் கிராமத்தைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்றனா்.