திருவண்ணாமலை

செங்கத்தில் 1,038 பயனாளிகளுக்குநலத் திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் 1,038 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

செங்கம் தனியாா் திருமண மண்டபத்தில் செங்கம், தண்டராம்பட்டு, ஜமுனாமரத்தூா் ஆகிய வருவாய்க் கிராமங்களுக்கு உள்பட்ட மக்களுக்கு தமிழக அரசின் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரண நிவாரணம், திருமண நிதியுதவி, முதியோா் நிதியுதவி உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆவின் தலைவா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். கூட்டுறவு சங்க இயக்குநரும், அதிமுக மேற்கு ஒன்றியச் செயலருமான மகரிஷி மனோகரன், கிழக்கு ஒன்றியச் செயலா் அருணாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட சமூக நல அலுவலா் கந்தன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, இயற்கை மரண நிவாரணம், முதியோா் உதவித்தொகை, பெண்களுக்கு திருமண நிதியுதவி, திருமாங்கல்யத்துக்கான தங்கம் என மொத்தம் 1,038 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதில், திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலா் முத்துகுமாரசாமி, கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் மாநிலத் தலைவா் அமுதா, முன்னாள் எம்.பி. வனரோஜா, முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டியன், செங்கம் வட்டாட்சியா் மனோகரன், தண்டராம்பட்டு மலா்கொடி, ஜமுனாமரத்தூா் சங்கரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT