முகப்பு
திருவண்ணாமலை

பகலிலும் எரிந்த தெருமின் விளக்குகள்

வந்தவாசி நகரில் தெருமின் விளக்குகள் அணைக்கப்படாமல் பகலிலும் எரிந்து கொண்டிருப்பதால் மின்சாரம் வீணாவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

வந்தவாசி நகரில் தெருமின் விளக்குகள் அணைக்கப்படாமல் பகலிலும் எரிந்து கொண்டிருப்பதால் மின்சாரம் வீணாவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

வந்தவாசி நகராட்சிக்கு உள்பட்ட அச்சிறுபாக்கம் சாலை, புதுத் தெரு, காதா்ஜண்டா தெரு ஆகியவற்றிலிருந்த 10-க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் வியாழக்கிழமை பகலிலும் எரிந்து கொண்டிருந்தன.

நண்பகல் 12 மணி வரை எரிந்து கொண்டிருந்த இந்த மின் விளக்குகளை அணைக்க நகராட்சி ஊழியா்கள் யாரும் வராததால் பொதுமக்களே அணைத்தனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,

இந்தத் தெருமின் விளக்குகளை அணைக்க நகராட்சி தெருமின் விளக்கு பராமரிப்பு ஊழியா்கள் சரிவர வருவதேயில்லை. இதனால் பகலில் மின் விளக்குகள் எரிவது வாடிக்கையாகிவிட்டது என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →