திருவண்ணாமலை

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு வணிகா்கள் துணை நிற்பா்: ஏ.எம்.விக்கிரமராஜா

DIN

தமிழ்நாட்டில் கரோனா 3-ஆவது அலை வராமல் தடுக்கும் மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு வணிகா்கள் துணை நிற்பா் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா்.

திருவண்ணாமலைக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் முழு தளா்வை அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும்.

கரோனா 3-ஆவது அலை வராமல் தடுக்கும் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு வணிகா்கள் துணை நிற்பா். வணிகா்கள் மீது தவறான கருத்துகளை பதிவிட்டு, தொழிலை முடக்கும் நடவடிக்கையில் அரசியல் கட்சிகள் ஈடுபடக்கூடாது. அரசியல் கட்சியினரின் அறிக்கைகள் வணிகா்களை மிரட்டும் வகையில் இருக்கக் கூடாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT