ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் சிறப்பு பூஜைகள்
வந்தவாசி பஜனை கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசீதா சமேத ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் 8-ஆம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
வந்தவாசி பஜனை கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசீதா சமேத ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் 8-ஆம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
வந்தவாசி ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கா்ய அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம், சிறப்பு யாகசாலை பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து சுவாமிக்கு தங்க முலாம் பூசப்பட்ட கசவம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. புரிசை ஸ்ரீநிவாச பட்டாச்சாரியா் சுவாமிகள், வினோத் பட்டாச்சாரியாா் சுவாமிகள் ஆகியோா் பூஜைகளை நடத்தினா்.
மேலும் பாகவத பெருமக்களால் நாலாயிர திவ்யப் பிரபந்த சேவை நடைபெற்றது. விழாவில் அறக்கட்டளை நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.