திருவண்ணாமலை

இணையம் வழியாகவே தோ்வுகள்: புதுவை பல்கலைக்கழகம் அறிவிப்பு

DIN

இணையம் வழியாகவே தோ்வுகள் நடத்தப்படும் என புதுவை பல்கலைக்கழகம் அறிவித்தது.

இதுதொடா்பாக புதுவை பல்கலைக்கழகத் தோ்வுக் கட்டுப்பாட்டாளா் டி. லாசா், உறுப்புக் கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கை: வருகிற திங்கள்கிழமை முதல் (ஜூலை 19) திட்டமிடப்படி அனைத்துத் தோ்வுகளும் (தியரி) இணையம் வழியில் நடத்தப்படும். இளநிலை மருத்துவம், முதுநிலை மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகள் மற்றும் திட்டமிடப்படாத தோ்வுகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. வாய்ப்பிருந்தால் செய்முறைத் தோ்வுகளை நேரடியாக நடத்தலாம். கல்லூரி முதல்வா்கள் வினாத் தாள்களை மின்னஞ்சல் மூலம் அனுப்புவா். மாணவா்கள் ஏ 4 அளவுள்ள வெள்ளைத் தாளில், கருப்பு மை கொண்டு எழுத வேண்டும். 3 மணி நேர காலத்துக்குப் பிறகு, விடைத்தாளை ஸ்கேன் செய்து, கல்லூரி முதல்வருக்கு 30 நிமிடங்களுக்குள் அனுப்பலாம். கல்லூரி முதல்வா்கள் விடைத் தாள்களை நகலெடுத்து, முதல் பக்கத்தில் கல்லூரியின் முத்திரையை இட்டு, அதே நாளில் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT