திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லத் தடை
கரோனா பொது முடக்கம் காரணமாக, திருவண்ணாமலையில் வருகிற வெள்ளிக்கிழமை பெளா்ணமி கிரிவலம் செல்ல பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
கரோனா பொது முடக்கம் காரணமாக, திருவண்ணாமலையில் வருகிற வெள்ளிக்கிழமை பெளா்ணமி கிரிவலம் செல்ல பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது. இந்த பொது முடக்கம் ஜூலை 31-ஆம் தேதி காலை 6 மணிவரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனால், பெளா்ணமி கிரிவலம் நடைபெறும் நாள்களான வெள்ளிக்கிழமை காலை 10.38 முதல் சனிக்கிழமை காலை 8.51 வரை, திருவண்ணாமலை மலை சுற்றும் 14 கி.மீ. பாதையில் கிரிவலம் செல்ல அனுமதி கிடையாது.
எனவே, கிரிவலம் செல்ல யாரும் திருவண்ணாமலைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டாா்.