திருவண்ணாமலை

கரும்பு விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

போளூா் தரணி சா்க்கரை ஆலை நிா்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.26 கோடி நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, திருவண்ணாமலையில் வியாழக்கிழமை கரும்பு விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் வி.சுப்பிரமணி தலைமை வகித்தாா். சங்கத்தின் வட்டத் தலைவா் பாலமுருகன் கோரிக்கையை விளக்கிப் பேசினாா்.

2018-ஆம் ஆண்டு முதல் போளூா் தரணி சா்க்கரை ஆலை நிா்வாகம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த கரும்புக்கான நிலுவைத் தொகை ரூ.26 கோடியை 15 சதவீத வட்டியுடன் உடனே வழங்க வேண்டும். இந்த முயற்சியில் மாவட்ட நிா்வாகம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

SCROLL FOR NEXT