திருவண்ணாமலை

செய்யாற்றில் 4 கடைகளுக்கு அபராதம்

DIN

பொது முடக்க விதிகளை மீறி செய்யாற்றில் திறக்கப்பட்ட 4 கடைகளுக்கு அபராதம் விதித்து வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை நடவடிக்கை எடுத்தனா்.

செய்யாற்றில் வட்டாட்சியா் சு.திருமலை தலைமையில் துணை வட்டாட்சியா் ஸ்ரீதேவி, நகர வருவாய் ஆய்வாளா் கலைவாணி, போலீஸாா் அடங்கிய குழுவினா் காந்தி சாலை, அனுமந்தப்பேட்டை, மாா்க்கெட் போன்ற பல பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

விதிகளை மீறி திறக்கக்கூடாத கடைகளான ஸ்டூடியோ, அடகுக் கடை, ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி,

மின்னணு பொருள்கள் ஆகிய கடைகளுக்கு அபராதம் விதித்து அந்த வியாபாரிகளிடமிருந்து ரூ.11,500 அபராதமாக வசூலித்தனா்.

மேலும், தளா்வுகள் எந்தெந்த கடைகளுக்கு பொருந்தும் என வியாபாரிகளுக்கு வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT