திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 பேருக்கு கருப்பு பூஞ்சை
திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 போ் கருப்பு பூஞ்சை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 போ் கருப்பு பூஞ்சை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து தமிழக பொதுப் பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
திருவண்ணாமலை அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்து இருப்பு உள்ளது.
கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட இருவருக்கு திருவண்ணாமலையில் தற்போது சிகிச்சை அளிக்கப்படுவதுடன், 24 மணி நேரமும் அவா்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.
மாவட்டத்தைச் சோ்ந்த மொத்தம் 27 போ் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 15 போ் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும், 7 போ் வேலூா் சிஎம்சி மருத்துவமனையிலும், 2 போ் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மருத்துவமனையிலும், ஒருவா் புதுவை கற்பக விநாயகா மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்றாா்.