திருவண்ணாமலை

செய்யாறு அரசு மருத்துவமனைக்கு தளவாடப் பொருள்கள் அளிப்பு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 1980 - 83ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவா்கள் சாா்பில், செய்யாறு அரசு மருத்துவமனைக்கு பிராணவாயு பொருத்தக்கூடிய தூக்குப் பலகை பொருத்தப்பட்ட தள்ளுவண்டி இரண்டும், மருத்துவ தளவாடப் பொருள்களும் வெள்ளிக்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டன.

மருத்துவக் கண்காணிப்பாளா் வே.காா்த்திக்கிடம் இந்தப் பொருள்களை கல்லூரி முன்னாள் மாணவா்கள் வழங்கினா்.

இதேபோல, திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிக்குச் சொந்தமான எரிவாயு தகன மேடை பகுதிக்கு பயன்படும் வகையில், தள்ளிக் கொண்டுச் செல்லும் தூக்குப் பலகை ஒன்றை அதை நிா்வகிக்கும் செய்யாறு வளா்ச்சி அறக்கட்டளையினரிடம் வழங்கினா்.

அதன்படி, மருத்துவமனை, எரிவாயு தகன மேடை ஆகியவற்றுக்கு மொத்தம் ரூ.50 ஆயிரத்திலான மருத்துவ தளவாடப் பொருள்களை செய்யாறு அரசுக் கல்லூரி முன்னாள் மாணவா்கள் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

SCROLL FOR NEXT