கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் திருவண்ணாமலை ஆட்சியா் ஆலோசனை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறை அலுவலா்கள், மருத்துவா்களுடன் ஆட்சியா் பா.முருகேஷ் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறை அலுவலா்கள், மருத்துவா்களுடன் ஆட்சியா் பா.முருகேஷ் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக்
கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.முத்துக்குமாரசாமி தலைமை வகித்தாா்.
கூடுதல் ஆட்சியா் பிரதாப், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் திருமால்பாபு, மருத்துவமனை கண்காணிப்பாளா் ஷகில் அஹமது, துணை மருத்துவ கண்காணிப்பாளா் ஸ்ரீதரன் சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்டத்தில் நடத்தப்படும் காய்ச்சல், கரோனா பரிசோதனை முகாம்கள், கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், தினசரி குணமாகும் நோயாளிகளின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்த ஆட்சியா் பா.முருகேஷ், கரோனா தொற்றைத் தடுக்க அனைத்து அதிகாரிகளும் தனக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.
கூட்டத்தில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அஜிதா, உதவி ஆட்சியா் (பயிற்சி) கட்டா ரவி தேஜா மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.