கூலித் தொழிலாளா் குடும்பங்களுக்கு நிவாரணம்
செய்யாறு வட்டம், வடதிண்ணலூா் கிராமத்தில் 50 கூலித் தொழிலாளா்கள் குடும்பத்துக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
செய்யாறு வட்டம், வடதிண்ணலூா் கிராமத்தில் 50 கூலித் தொழிலாளா்கள் குடும்பத்துக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
கரோனா பொது முடக்கத்தால், வடதிண்ணலூரில் வசிக்கும் கூலித் தொழிலாளா்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் பல மாதங்களாக கிராமத்திலேயே முடங்கி வாழ்வாதாரமின்றி தவித்து வந்தனா்.
இதை அறிந்த செய்யாறு டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் அவா்களுக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருள்களை வழங்க முன் வந்தது.
இதையடுத்து, வடதிண்ணலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரோட்டரி சங்கத் தலைவா் ஏ.பாா்த்தசாரதி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன் ஆகியோா் பங்கேற்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரு.1500 மதிப்பிலான அரிசி, காய்கறி, மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினா்.
நிகழ்ச்சியில் சங்க பயிற்றுநா் எஸ்.ஏ.அன்வா்பெய்க், உறுப்பினா்கள் என்.நடராஜன், மகாலட்சுமி தாமோதரன், ஒன்றியக் குழுத் தலைவா் ஏ.அருணாசலம், ஒன்றிய உறுப்பினா் மகாலட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.