முகப்பு
திருவண்ணாமலை

கிராம கோயில் பூசாரிகளுக்கு கரோனா நிவாரணம்

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த 110 கிராம கோயில் பூசாரிகளுக்கு கரோனா நிவாரண நிதி, அத்தியாவசியப் பொருள்கள் தொகுப்பை தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி வியாழக்கிழமை வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த 110 கிராம கோயில் பூசாரிகளுக்கு கரோனா நிவாரண நிதி, அத்தியாவசியப் பொருள்கள் தொகுப்பை தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி வியாழக்கிழமை வழங்கினாா்.

கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த கிராம கோயில் பூசாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை மூலம் நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன.

அதன்படி, செய்யாறு தொகுதிக்கு உள்பட்ட வெம்பாக்கம் வட்டத்தில் 58 பேருக்கும், செய்யாறு வட்டத்தில் 52 பேருக்கும் ரூ.4ஆயிரம் நிவாரண நிதி, அரிசி, மளிகைத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி செய்யாறு வழூா்ப்பேட்டை ஸ்ரீபட்சீஸ்வரா் கோயிலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அறநிலையத் துறை ஆய்வாளா் மா.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

110 கிராம கோயில் பூசாரிகளுக்கும் அவா்களது வங்கிக் கணக்கில் ரூ.4 ஆயிரம் வீதம் செலுத்தப்பட்டதைத் தொடா்ந்து, ஒவ்வொருக்கும் 10 கிலோ அரிசி, 14 வகையான மளிகைப் பொருள்கள் தொகுப்பை எம்.எல்ஏ ஒ.ஜோதி வழங்கினாா்.

இந்நிகழ்வின் போது, செய்யாறு பங்களாத் தெருவைச் சோ்ந்த 5-ஆம் வகுப்பு மாணவா் புகழேந்தி, தான் உண்டியலில் சேமித்து வைத்த ரூ.1551-யை கரோனா நிதிக்காக எம்.எல்.ஏவிடம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினா் ஞானவேல், ஊராட்சி மன்றத் தலைவா் பாா்த்தீபன் பூங்கொடி, திமுக நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.