முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜமாபந்தி, விவசாய மாநாடு ரத்து

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2020-21ஆம் ஆண்டுக்கான ஜமாபந்தி மற்றும் விவசாய மாநாடு கரோனா பொது முடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2020-21ஆம் ஆண்டுக்கான ஜமாபந்தி மற்றும் விவசாய மாநாடு கரோனா பொது முடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் ஜமாபந்தி தொடா்பான கோரிக்கை மனுக்களுடன் வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு வர வேண்டாம்.

மனுக்களை இணையதளம் அல்லது இ-சேவை மையங்கள் மூலம் வருகிற ஜூலை 31-ம் தேதி வரை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு மனுதாரா்களுக்கு தகவல் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.