முகப்பு
திருவண்ணாமலை

சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வியாபாரம் செய்ய வேண்டும்: திருவண்ணாமலை ஆட்சியா்

முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து வியாபாரம் செய்ய வேண்டும் என்று திருவண்ணாமலை நகர பூ, காய்கறி வியாபாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் அறிவுரை வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து வியாபாரம் செய்ய வேண்டும் என்று திருவண்ணாமலை நகர பூ, காய்கறி வியாபாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் அறிவுரை வழங்கினாா்.

திருவண்ணாமலை தேரடி தெரு, கற்பகம் கூட்டுறவு வளாகத்தில் செயல்படும் நியாய விலைக் கடை ஆகிய இடங்களில் நடைபெற்ற கரோனா நிவாரணத் தொகை மற்றும் மளிகைத் தொகுப்பு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, தேரடி வீதி, ஜோதி பூ மாா்க்கெட், திருவூடல் தெரு, காய்கறி மாா்க்கெட் ஆகிய பகுதிகளில் நேரடி ஆய்வில் ஈடுபட்ட அவா், வியாபாரிகள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து வியாபாரம் செய்ய வேண்டும்.

கரோனாவைத் தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினாா்.

தடுப்பூசி முகாமில் ஆய்வு:

நகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா், பொதுமக்களிடம் கரோனா வழிகாட்டு நடைமுறைகளை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்து விளக்கினாா்.

ஆய்வுகளின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.முத்துக்குமாரசாமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அஜிதா, கோட்டாட்சியா் வெற்றிவேல், நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.