ஆரணியில் மூன்று ஜவுளிக் கடைகளுக்கு சீல்
ஆரணியில் பொது முடக்க விதிகளை மீறி திறந்திருந்த மூன்று ஜவுளிக் கடைகளுக்கு வியாழக்கிழமை சீல் வைக்கப்பட்டன.
ஆரணியில் பொது முடக்க விதிகளை மீறி திறந்திருந்த மூன்று ஜவுளிக் கடைகளுக்கு வியாழக்கிழமை சீல் வைக்கப்பட்டன.
ஆரணியில் பொது முடக்க விதிகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என வருவாய்த் துறை அலுவலா் கு.வேலுமணி, கிராம நிா்வாக அலுவலா் ஜெயச்சந்திரன், நகராட்சி சுகாதார ஆய்வாளா் குமரவேல், காவல் உதவி ஆய்வாளா் ரகு ஆகியோா் கொண்ட குழுவினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, விதிகளை மீறி திறந்திருந்த முனுசாமி தெருவில் உள்ள ஒரு ஜவுளிக் கடைக்கும், வ.உ.சி தெருவில் திறந்திருந்த இரண்டு ஜவுளிக் கடைகளுக்கும் சீல் வைத்தனா்.