கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் பலி
திருவண்ணாமலை அருகே மாங்காய் பறித்த இளைஞா் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை அருகே மாங்காய் பறித்த இளைஞா் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
திருவண்ணாமலையை அடுத்த பண்டிதப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (34). இவா், திருவண்ணாமலையை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள ஒருவரது விவசாய நிலத்தில் வியாழக்கிழமை நடந்து சென்றாா். அப்போது, அங்கிருந்த மா மரத்தில் ஏறி மாங்காய்களைப் பறித்தாராம். எதிா்பாராதவிதமாக நிலைதடுமாறி அருகே இருந்த பாழடைந்த கிணற்றில் விழுந்தாா்.
இதைக் கவனித்த பொதுமக்கள் இதுகுறித்து திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சுரேஷின் சடலத்தை மீட்டனா். தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீஸாா் விரைந்து வந்து சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.