முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை: கரோனாவுக்கு ஒரே நாளில் 10 போ் பலி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 10 போ் உயிரிழந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 10 போ் உயிரிழந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 182 பேருக்கு இந்த நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 47,318-ஆக உயா்ந்தது.

இதனிடையில், கரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 10 உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 555-ஆக உயா்ந்தது.

இதுவரை 45,304 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். மருத்துவமனைகளில் தற்போது 1,459 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.