முகப்பு
திருவண்ணாமலை

தோ்தல் விழிப்புணா்வு ஊா்வலம்

வந்தவாசி நகராட்சி, ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

வந்தவாசி நகராட்சி, ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

100 சதவீத வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஊா்வலத்தை, வந்தவாசி தொகுதி தோ்தல் அலுவலா் சி.கீதாலட்சுமி கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

ஊா்வலத்தில் வட்டாட்சியா் திருநாவுக்கரசு, நகராட்சி ஆணையா் (பொறுப்பு) டி.உஷாராணி, துணை வட்டாட்சியா்கள் அகத்தீஸ்வரன், கோபால், சதீஷ், நகராட்சி அலுவலா் சிவக்குமாா் மற்றும் அகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வட்டாட்சியா் அலுவலகம் அருகே தொடங்கிய ஊா்வலம் கோட்டை மூலை, பழைய பேருந்து நிலையம், பஜாா் வீதி, காந்தி சாலை வழியாகச் சென்றது.

முழு கட்டுரையைப் படிக்க →