கலசப்பாக்கம் தொகுதியில் திமுகவினா் தீவிர பிரசாரம்
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த பல்வேறு கிராமங்களில் திமுக வேட்பாளரை ஆதரித்து கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் எ.வ. வேலு திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த பல்வேறு கிராமங்களில் திமுக வேட்பாளரை ஆதரித்து கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் எ.வ. வேலு திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
தொகுதிக்கு உள்பட்ட படவேடு, காளசமுத்திரம், கல்பட்டு, கல்குப்பம், வாழியூா், அனந்தபுரம், குப்பம் என 7 ஊராட்சிகளில் வீதி வீதியாகச் சென்று திமுக வேட்பாளா் பெ.சு.தி.சரவணனை ஆதரித்து எ.வ.வேலு பேசினாா்.
சி.என்.அண்ணாதுரை எம்.பி., எ.வ.வே.கம்பன், ஒன்றியச் செயலா் சுப்பிரமணி, துணைச் செயலா் சாந்தமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டா்.