முகப்பு
திருவண்ணாமலை

ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் தெப்பல் உற்சவம்

சேத்துப்பட்டை அடுத்த வடவெட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

சேத்துப்பட்டை அடுத்த வடவெட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் மாசித் திருவிழா கடந்த 12-ஆம் தேதி விநாயகா் பூஜை, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடா்ந்து மகா சிவராத்திரி விழா, மயானக்கொள்ளை, அம்மன் ஊஞ்சல் தாலாட்டு ஆகியவை நடத்தப்பட்டன.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கோயில் அருகே உள்ள வெள்ளகுளத்தில் அம்மனுக்கு திருக்கல்யாணம், தீா்த்தவாரியுடன் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

திருக்கல்யாண வைபவத்தில் சிவன் பாா்வதி தெப்பலில் அமா்ந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இன்னிசை நிகழ்ச்சி, வாணவேடிக்கையும் நடைபெற்றது. மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் புண்ணியமூா்த்தி மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள், பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.