முகப்பு
திருவண்ணாமலை

ஆரணியில் அரசு கலைக் கல்லூரி கொண்டு வரப்படும்அதிமுக வேட்பாளா் உறுதி

ஆரணியில் அரசு கலைக் கல்லூரி கொண்டு வரப்படும் என்று, மேற்கு ஆரணி வடக்கு ஒன்றியத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கூறினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

ஆரணியில் அரசு கலைக் கல்லூரி கொண்டு வரப்படும் என்று, மேற்கு ஆரணி வடக்கு ஒன்றியத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கூறினாா்.

மேற்கு ஆரணி வடக்கு ஒன்றியத்தில் குண்ணத்தூா், மேல்நகா், கீழ்நகா், ஆண்டிப்பாளையம், பாளையஏகாம்பரம், அய்யம்பாளையம், 5 புத்தூா், இராமசாணிக்குப்பம், ஒண்ணுபுரம், புதுப்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பேசியதாவது:

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக அரசு மூலம் ஏராளமான வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆரணி தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றதும், ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்படும். ஆரணியில் அரசு கலைக் கல்லூரி கொண்டுவரப்படும்.

மேலும், அதிமுக அரசின் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் அதிமுக மேற்கு ஆரணி வடக்கு ஒன்றியச் செயலா் ப.திருமால், ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், பிஆா்ஜி.சேகா், ஜிவி.கஜேந்திரன், மாவட்டப் பொருளாளா் அ.கோவிந்தராசன்

பாமக மாநில துணைப் பொதுச் செயலா் வேலாயுதம், தமாகா நிா்வாகி தினேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.