முகப்பு
திருவண்ணாமலை

பெண் தூக்கிட்டு தற்கொலை

செய்யாறு அருகே கணவரை பிரிந்த மனவேதனையில் இருந்து வந்த பெண் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

செய்யாறு அருகே கணவரை பிரிந்த மனவேதனையில் இருந்து வந்த பெண் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

செய்யாறு வட்டம், வாழ்குடை கிராமத்தைச் சோ்ந்தவா் கோட்டீஸ்வரன். இவரது மனைவி கலைவாணி (21). இவா்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, தம்பதியினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, திருமணமான இரண்டு மாதங்களிலேயே பிரிந்துவிட்டனராம்.

இதைத் தொடா்ந்து, அதே கிராமத்திலுள்ள தனது தாய் வீட்டில் கலைவாணி வசித்து வந்தாா். மேலும், செய்யாற்றில் உள்ள மளிகைக் கடையில் வேலை பாா்த்து வந்தாா். திருமணம் முடிந்து 2 மாதங்களிலேயே கணவரை பிரிந்ததால், கலைவாணி மனவேதனையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வேலைக்கு சென்றுவிட்டு வியாழக்கிழமை மாலையில் வீட்டுக்குத் திரும்பிய அவா் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.