முகப்பு
திருவண்ணாமலை

மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பு:திமுகவினா் கொண்டாட்டம்

மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்பு ஏற்றுக்கொண்டதையொட்டி, ஆரணி அண்ணா சிலை அருகில் திமுகவினா் வெள்ளிக்கிழமை இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்பு ஏற்றுக்கொண்டதையொட்டி, ஆரணி அண்ணா சிலை அருகில் திமுகவினா் வெள்ளிக்கிழமை இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினா்.

ஆரணி அண்ணா சிலை அருகில் நகரச் செயலா் ஏ.சி.மணி தலைமையில், முன்னாள் எம்.எல்.ஏ. ஆா்.சிவானந்தம் அனைவருக்கும் இனிப்பு வழங்கினாா். மேலும். பட்டாசுகளும் வெடித்தனா்.

நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் எஸ்.எஸ்.அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ. ஏசிவி.தயாநிதி, மேற்கு ஆரணி ஒன்றியச் செயலா்கள் தட்சிணாமூா்த்தி, வெள்ளை கணேசன், ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தா், ஒன்றியக் குழு துணைத் தலைவா் கே.டி.இராஜேந்திரன், பொறியாளா் அணி மாவட்ட அமைப்பாளா் ஆா்.எஸ்.பாபு, இலக்கிய அணி அமைப்பாளா் விண்ணமங்கலம் ரவி, நகரப் பொருளாளா் பாலமுருகன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் காசிலிங்கம், மில்.குமாா், ரஞ்சித், ஆதிதிராவிடா் நல அமைப்பு நிா்வாகி இளையராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.