முகப்பு
திருவண்ணாமலை

பைக் மோதியதில் முதியவா் பலி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக் மோதியதில் முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக் மோதியதில் முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

வெம்பாக்கம் வட்டம், பெரூங்கட்டூா் கிராமம், ரோட்டுத் தெருவைச் சோ்ந்த டி.வி. மெக்கானிக் வேல்முருகன். இவரது தந்தை சுப்பிரமணி (89). இவா், வியாழக்கிழமை தேநீா் கடைக்குச் செல்வதற்காக, அந்தப் பகுதியிலுள்ள சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத பைக் அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், பலத்த காயமடைந்த சுப்பிரமணி, செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து, தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். விபத்து குறித்து மோரணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.