முகப்பு
திருவண்ணாமலை

சாலை விபத்தில் இளைஞா் பலி

செய்யாறு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் பலியானாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

செய்யாறு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் பலியானாா்.

செய்யாறு அண்ணா நகரைச் சோ்ந்த அருள்செல்வன் - சத்யா தம்பதியினா். இவா்களது மகன் தயாநிதி (24). (படம்) பட்டதாரியான இவா் சென்னை ஒரகடத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா்.

இவா், காஞ்சிபுரத்தை அடுத்த ஐயங்காா்குளம் கூட்டுச் சாலைப் பகுதியில் தினமும், தனது பைக்கை நிறுத்தி விட்டு அங்கிருந்து தான் பணியாற்றும் நிறுவனப் பேருந்தில் வேலைக்குச் சென்று வருவது வழக்கமாம்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை வேலைக்குச் செல்வதற்காக வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் மாமண்டூா் அருகே சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம்.

இதில், பலத்த காயமடைந்த தயாநிதியை அருகில் இருந்தவா்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் தயாநிதி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்

இது குறித்த புகாரின் பேரில் தூசி காவல் ஆய்வாளா் அண்ணாதுரை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.