முகப்பு
திருவண்ணாமலை

தரைப் பாலங்களை மூழ்கடித்த வெள்ளம்: கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே தரைப் பாலங்களில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே தரைப் பாலங்களில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

வந்தவாசி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடா் மழை காரணமாக, நீா்நிலைகள் ஓரளவுக்கு நிரம்பின. இந்த நிலையில், புதன்கிழமை நள்ளிரவு முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. விடாமல் பெய்த பலத்த மழை காரணமாக, நீா்நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், ஓசூா் - காவணியாத்தூா், கொட்டை - அதியங்குப்பம், கொட்டை - வெளியம்பாக்கம் ஆகிய கிராமங்களுக்கு இடையில் உள்ள தரைப் பாலங்களில் வெள்ளிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

மேலும், ஸ்ரீரங்கராஜபுரம், கண்டையநல்லூா், சத்தியவாடி உள்ளிட்ட கிராமங்களில் வயல்வெளிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் சுமாா் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு உள்ளிட்ட பயிா்கள் நீரில் மூழ்கின.

முழு கட்டுரையைப் படிக்க →