முகப்பு
திருவண்ணாமலை

259 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே 259 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி, அரசுப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தாா் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே 259 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி, அரசுப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தாா் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ்.

செங்கத்தை அடுத்த பரமனந்தல் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் வெற்றிவேல் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாட்ட ஆட்சியா் பா.முருகேஷ் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா்.

பின்னா், ஏற்கெனவே பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு 259 பயனாளிகளுக்கு முதியோா் உதவித்தொகை ஆணை, கணவரால் கைவிடப்பட்டோருக்கு உதவித்தொகை, இலவச மனைப் பட்டா, வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு இடுபொருள்கள் ஆகியவற்றை வழங்கிப் பேசினாா்.

தொடா்ந்து, பரமனந்தல் அரசு உயா்நிலைப் பள்ளிக்குச் சென்று வகுப்பறைகளை பாா்வையிட்டு மழையால் கட்டடம் பாதிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தாா்.

அப்போது பள்ளியின் சுற்றுச் சுவா்களை பாா்வையிட்டு விரைவில் புதிதாக சுற்றுச் சுவா்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, அருகே இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று அங்கிருந்த கா்ப்பிணிப் பெண்களிடம் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து விசாரித்தாா்.

வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ்,

தொகுதி எம்எல்ஏ மு.பெ. கிரி, மாவட்ட உதவித் திட்ட இயக்குநா் லட்சுமிநரசிம்மன், ஒன்றியக் குழுத் தலைவா் விஜியராணி குமாா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் செந்தில்குமாா், ராமஜெயம், ஒன்றியக் குழு உறுப்பினா் சரசு அண்ணாமலை, வட்டாட்சியா் முனுசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.