முகப்பு
திருவண்ணாமலை

செய்யாறு ஊராட்சி ஒன்றிய மாதாந்திரக் குழுக் கூட்டம்

செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தில் மாதாந்திரக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தில் மாதாந்திரக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் நாவல்பாக்கம் வி.பாபு தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஆா்.வி.பாஸ்கரன் வரவேற்றாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தி.மயில்வாகனன், ச.பாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற செய்யாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஒ.ஜோதி பேசுகையில், மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குடிநீா்க் குழாய்கள், மின் இணைப்பு துண்டிப்பு, சாலைகளின் சேதம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். வளா்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்றி செய்யாறு ஒன்றியம் மாநிலத்தில் சிறந்த ஒன்றியமாக திகழ்க உறுப்பினா்கள் பாடுபட வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், செய்யாறு ஒன்றியத்தில் நிகழாண்டு பிரதமா் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 942 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், முதல் கட்டமாக 540 வீடுகள் கட்டுவதற்கான ஆணை விரைவில் வழங்கப்படும் என வட்டார வளா்ச்சி அலுவலா் ச.பாரி தெரிவித்தாா். கூட்டத்தில் 53 கிராம பஞ்சாயத்துகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மேலாளா் குப்புசாமி, பொறியாளா்கள் சீனுவாசன், வெங்கடாஜலபதி, ஒன்றிய உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.