பள்ளியில் தூய்மைப் பணி
வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தூய்மைப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தூய்மைப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
தமிழகத்தில் வருகிற நவ. 1-ஆம் தேதி முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி, இளங்காடு பள்ளியை தூய்மை செய்யும் பணிகள் நடைபெற்றன.
இளங்காடு ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள் பள்ளி வகுப்பறை, மாடிப் பகுதி, நீா்த்தேக்கத் தொட்டிகள் ஆகியவற்றை தூய்மைப்படுத்தினா்.
மேலும், ஊரக வேலைத் திட்டப் பணியாளா்கள் பள்ளி வளாகத்தில் இருந்த புற்களை அகற்றினா். பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
ஊராட்சி மன்றத் தலைவா் பாண்டியன், தலைமை ஆசிரியை பரிமளா ஆகியோா் முன்னிலையில் இந்தப் பணிகள் நடைபெற்றன.