தேசிய ஒற்றுமை தின விழிப்புணா்வு நிகழ்ச்சி
வந்தவாசியில் கோவிட் நோய்த் தடுப்பு, இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டம், தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை தின சிறப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றன.
வந்தவாசியில் கோவிட் நோய்த் தடுப்பு, இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டம், தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை தின சிறப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றன.
வேலூா் மக்கள் தொடா்பு கள விளம்பர அலுவலகம், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரி சாா்பில், நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சி.ருக்மணி தலைமை வகித்தாா்.
வட்டாட்சியா் வ.முருகானந்தம், வட்டார மருத்துவ அலுவலா் ஆனந்தன், கல்லூரிச் செயலா் எம்.ரமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வேலூா் கள விளம்பர உதவி அலுவலா் மு.ஜெயகணேஷ் வரவேற்றாா்.
கள விளம்பர சென்னை மண்டல இயக்குநா் காமராஜ் சிறப்புரையாற்றினாா். மேலும் இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினம் குறித்த ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு அவா் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். பேராசிரியை கலைவாணி நன்றி கூறினாா்.