திருவண்ணாமலை

சேத்துப்பட்டு அருகே செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலைப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் சேத்துப்பட்டு அருகே செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஜமுனாமரத்தூா், போளூா், ஆரணி என பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால், சேத்துப்பட்டு வட்டம், பெரணமல்லூா் ஒன்றியத்தில் உள்ள பெரிய கொழப்பலூா் - விநாயகபுரம் இடையே செல்லும் செய்யாற்றில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பாலம் அமைத்துத் தரக் கோரிக்கை

விநாயகபுரம், இமாபுரம், மேலானூா், கண்ணனூா், எஸ். காட்டேரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து, மாவட்டத்தின் பல்வேறு நகரங்களுக்குச் செல்லும் மாணவா்கள், அரசு ஊழியா்கள், பொதுமக்கள் பெரியகொழப்பலூா் வரவேண்டியுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாக கிராம மக்கள் பெரியகொழப்பலூா்-விநாயகபுரம் இடையே சிறு பாலம் அல்லது தரைப் பாலம் அமைத்துத் தர வேண்டும் எனக் கோரி, தமிழக முதல்வா், அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுக்கு மனு அனுப்பி வருகின்றனா்.

கடந்த ஆண்டு பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் சென்று பாா்வையிட்டுச் சென்றனா்.

ஆனால், அதற்கான பணி இதுநாள் வரை தொடங்கப்படவில்லை.

தற்போது, ஆற்றில் குறைந்த அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், இவ்வழியாக பொதுமக்கள் வரமுடியவில்லை.

பெரு மழைக் காலங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது, 10 கி.மீ. தொலைவுக்கு சுற்றிச்செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாலம் அமைத்துத் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

SCROLL FOR NEXT