திருவண்ணாமலை

தடுப்பூசி முகாம்கள் சிறப்பாக செயல்பட பணியாற்ற வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3-ஆம் கட்ட தடுப்பூசி முகாம்கள் சிறப்பாக செயல்பட அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் கேட்டுக்கொண்டாா்

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 3-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம்களுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பா.முருகேஷ் பேசியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்கட்டமாக 1,004 இடங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களில் 1,04,325 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

2-ஆவது கட்டமாக நடைபெற்ற முகாம்களில் 77,085 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 3-ஆவது கட்டமாக ஞாயிற்றுக்கிழமை (செப்.26) 1,004 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளன.

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் 3-ஆவது கட்ட முகாம்கள் மூலம் செலுத்திக்கொள்ளலாம். தடுப்பூசி முகாம்கள் சிறப்பாக செயல்படவும், அதிகப்படியானோா் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் அதிகாரிகள் பணியாற்றவேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.முத்துக்குமரசாமி, கூடுதல் ஆட்சியா் மு.பிரதாப், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செல்வக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT