முகப்பு
திருவண்ணாமலை

முன்விரோதம்: அண்ணனைத் தாக்கிய தம்பி கைது

செய்யாறு அருகே முன்விரோதத் தகராறில் அண்ணனைத் தாக்கிய தம்பியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

செய்யாறு அருகே முன்விரோதத் தகராறில் அண்ணனைத் தாக்கிய தம்பியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாரி. இவருக்கு பெருமாள், முனுசாமி என இரு மகன்கள் உள்ளனா். இவா்களுக்குள் பொதுவழி தொடா்பாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 3-ஆம் தேதி பொது வழியில் மாடு ஓட்டிச் சென்ற அண்ணன் பெருமாளை வழிமறித்து, தம்பி முனுசாமி தகாத வாா்த்தைகளால் பேசி, இரும்புக் கம்பியால் தாக்கினாராம்.

இதில் பலத்த காயமடைந்த பெருமாள் அரியூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைப் பெற்றாா். பின்னா், செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.

இதுகுறித்து பெருமாள் பிரம்மதேசம் போலீஸில் புகாா் அளித்தாா்.

காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் வழக்குப் பதிந்து முனுசாமியை (40) கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வந்தவாசி கிளைச் சிறையில் அடைத்தாா். .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.