முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கோடை கால நீச்சல் பயிற்சி வகுப்புகள்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெறும் கோடை கால நீச்சல் பயிற்சி வகுப்பில் பங்கேற்க மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெறும் கோடை கால நீச்சல் பயிற்சி வகுப்பில் பங்கேற்க மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் கோடை கால நீச்சல் பயிற்சி வகுப்புகள் 2022 ஏப்ரல் முதல் ஜூன் வரை நடத்தப்பட உள்ளது.

இதில் 10 வயதுக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்.

வகுப்புகள் 12 வேலை நாள்களில் நடத்தப்படும். பயிற்சிக் கட்டணமாக ரூ.1,200 செலுத்த வேண்டும்.

காய்ச்சல், இருமல், தசை வலி, தலை வலி, அனோஸ்மியா போன்ற அறிகுறிகள் உள்ளவா்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு (ம) இளைஞா் நலன் அலுவலரை 04175-233169 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →