திருவண்ணாமலை

அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியா் கண்காணிப்பு மையம் திறப்பு

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.1.78 கோடியில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த செவிலியா் கண்காணிப்பு மையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

DIN

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.1.78 கோடியில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த செவிலியா் கண்காணிப்பு மையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன கருவிகளுடன் கூடிய 32 தீவிர சிகிச்சை படுக்கைகளும், ஒருங்கிணைந்த செவிலியா் கண்காணிப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

ரூ.1.78 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை சென்னையில் இருந்தபடியே காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

அதேவேளையில், மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, மாநில தடகளச் சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.திருமால்பாபு, கண்காணிப்பாளா் ஷகில் அகமது, துணை கண்காணிப்பாளா் ஸ்ரீதரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT