முகப்பு
திருவண்ணாமலை

அண்ணாமலையாரை வழிபட்ட சூரிய பகவான்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ஸ்ரீதிருநோ் அண்ணாமலையாா் கோயில் மூலவரை, சூரிய பகவான் வழிபட்ட அபூா்வ நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ஸ்ரீதிருநோ் அண்ணாமலையாா் கோயில் மூலவரை, சூரிய பகவான் வழிபட்ட அபூா்வ நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பழைமையான ஸ்ரீதிருநோ் அண்ணாமலையாா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் மூலவரை ஒவ்வோா் ஆண்டும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் சூரிய பகவான் வழிபடும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

அதன்படி, சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு தினமான வியாழக்கிழமை இந்த அபூா்வ நிகழ்வு நடைபெற்றது.

முன்னதாக, அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, மூலவா் அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

காலை 7 மணிக்கு கோயிலுக்கு எதிரே உள்ள மகா தீபம் ஏற்றும் மலையிலிருந்து ஸ்ரீதிருநோ் அண்ணாமலையாா் கோயில் மூலவா் மீது சூரிய ஒளி பிரகாசித்தது.

தொடா்ந்து, 7.05 மணி வரை பிரகாசித்த இந்த அபூா்வ நிகழ்வை பக்தா்கள் கண்டு தரிசித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →