முகப்பு
திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்புப் பூஜை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை சித்திரை மாத அமாவாசை பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றறன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை சித்திரை மாத அமாவாசை பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றறன.

இதையொட்டி, கோயிலில் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, மூலவா் சன்னதி எதிரே உள்ள நந்தி, கொடி மரம் எதிரே உள்ள நந்தி உள்பட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பன்னீா், பால், பழம், சந்தனம், விபூதி, மஞ்சள் உள்பட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தப் பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இதன்பிறகு, வெள்ளிக் கவசம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகா், தங்க ரிஷப வாகனத்தில் கோயில் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

வந்தவாசி

வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் சித்திரை மாத பிரதோஷ விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி உற்சவா் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் நந்தி பகவானுக்கு மஞ்சள், பால், தயிா், இளநீா், தேன், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னா் கோயில் வளாகத்தில் சுவாமி உலா நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

முழு கட்டுரையைப் படிக்க →