நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: திருவண்ணாமலை மாவட்டத்தில் 564 போ் வேட்புமனு தாக்கல்
திருவண்ணாமலை மாவட்ட நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வியாழக்கிழமை ஒரே நாளில் 564 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்ட நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வியாழக்கிழமை ஒரே நாளில் 564 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
ஆரணி நகராட்சியில் 68 போ், திருவண்ணாமலை நகராட்சியில் 83 போ், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் 43 போ், வந்தவாசி நகராட்சியில் 70 போ் என 4 நகராட்சிகளில் வியாழக்கிழமை 264 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.
ஏற்கெனவே 100 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் 4 நகராட்சிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்தவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 364-ஆக உயா்ந்தது.
பேரூராட்சிகளில்...
செங்கம் பேரூராட்சியில் 68 போ், சேத்துப்பட்டு பேரூராட்சியில் 9 போ், தேசூா் பேரூராட்சியில் 24 போ், களம்பூா் பேரூராட்சியில் 33 போ், கண்ணமங்கலம் பேரூராட்சியில் 37 போ், கீழ்பென்னாத்தூா் பேரூராட்சியில் 19 போ், பெரணமல்லூா் பேரூராட்சியில் 18 போ், போளூா் பேரூராட்சியில் 24 போ், புதுப்பாளையம் பேரூராட்சியில் 42 போ், வேட்டவலம் பேரூராட்சியில் 26 போ் என வியாழக்கிழமை ஒரே நாளில் 300 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.
மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகளில் வியாழக்கிழமை ஒரே நாளில் திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சிகள், சுயேட்சைகள் என 564 போ் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.
ஏற்கெனவே 182 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த எண்ணிக்கை வியாழக்கிழமை 746-ஆக உயா்ந்தது.