திருவண்ணாமலைக்கு 1,459 மெட்ரிக் டன் யூரியா வருகை
திருவண்ணாமலைக்கு வந்துள்ள 1,459 மெட்ரிக் டன் யூரியா லாரிகளில் மொத்த, சில்லறை விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெறுகிறது.
திருவண்ணாமலைக்கு வந்துள்ள 1,459 மெட்ரிக் டன் யூரியா லாரிகளில் மொத்த, சில்லறை விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெறுகிறது.
சென்னை மணலியில் இருந்து நடப்புப் பருவத்துக்குத் தேவையான 1,459 மெட்ரிக் டன் எம்எப்எல் யூரியா சிறப்பு ரயிலில் திருவண்ணாமலை ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்தடைந்தது. இந்த யூரியா மூட்டைகள் சரக்கு லாரிகளில் ஏற்றப்பட்டு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியாா் மொத்த விற்பனை, சில்லரை விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெறுகிறது.
இதையடுத்து, தனியாா் உர விற்பனை நிலையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 3,065 மெட்ரிக் டன் யூரியா, 817 மெட்ரிக் டன் டிஏபி, 758 மெட்ரிக் டன் பொட்டாஷ், 4,460 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றும் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உரங்களை வாங்கி பயன்பெறலாம் என்று வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.