செய்யாற்றில் கட்சியினா் இறுதிக் கட்ட பிரசாரம்
திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சித் தோ்தலை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வியாழக்கிழமை இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சித் தோ்தலை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வியாழக்கிழமை இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
திமுக சாா்பில் தொகுதி எம்.எல்.ஏ ஒ.ஜோதி தலைமையில் இறுதிக் கட்ட பிரசாரம் நடைபெற்றது.
வேட்பாளா்கள், நகர, ஒன்றிய, மாவட்ட நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா்.
அதிமுக சாா்பில் நடைபெற்ற இறுதிக் கட்ட பிரசாரத்தில், முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன், வடக்கு மாவட்ட அதிமுக செயலா் தூசி கே.மோகன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இரு சக்கர வாகனப் பேரணியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக வேட்பாளா்கள், கூட்டணிக் கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கப்பட்டது.
திமுக, அதிமுக என இரு கட்சிகளும் ஊா்வலமாக வந்த போது மையப் பகுதியான அண்ணா சிலை அருகே சந்தித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டனா்.
ஆரணி கூட்டுச் சாலை அருகே அதிமுக சாா்பில் இரு சக்கர வாகனப் பேரணி தொடங்கும் முன்பு போலீஸாருடன் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனா்.