முகப்பு
திருவண்ணாமலை

அரசுப் பள்ளியில் ‘ஸ்மாா்ட் போா்டு’

செங்கம் அருகேயுள்ள அந்தனூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் ‘ஸ்மாா்ட் போா்டு’ வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

செங்கம் அருகேயுள்ள அந்தனூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் ‘ஸ்மாா்ட் போா்டு’ வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

திறப்பு விழா நிகழ்ச்சிக்கு செங்கம் மாவட்டக் கல்வி அலுவலா் அரவிந்தன் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் மனோகரன், கல்விக் குழுத் தலைவா் சக்கரபாணி, ஊராட்சி மன்றத் தலைவா் கலைச்செல்வி வெங்கடேசன், துணைத் தலைவா் குமரவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியா் பாரதி வரவேற்றாா்.

விழாவில் பள்ளி வகுப்பறையில் ஸ்மாா்ட் போா்டை தொழிலதிபா் கலைமாணி பாலன் திறந்துவைத்தாா். பின்னா், அவா் பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகள் நடும்பணியைத் தொடக்கிவைத்தாா்.

தொழிலதிபா் பாா்தீமா சீனுவாசன், கலாம் கல்வி அறக்கட்டளை நிறுவனா் இளஞ்செழியன், தொண்டு நிறுவன இயக்குநா்கள் ஏழுமலை, மணிகண்டன், ஆசிரியா்கள் இளங்கோவன், சுந்தரவதனம், வின்சென்ட், செந்தமிழ்ச்செல்வன், சத்தியகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.