திருவண்ணாமலை

ஏரியில் மூழ்கி இறந்த குழந்தைகளின் பெற்றோருக்கு நிவாரணம்

DIN

திருவண்ணாமலை அருகே ஏரியில் மூழ்கி இறந்த 3 குழந்தைகளின் பெற்றோரிடம் ரூ.1.50 லட்சம் நிவாரண உதவியை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.

திருவண்ணாமலையை அடுத்த சு.கம்பம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் மாபுக்கான் (38). இவரது மகள்கள் நஸ்ரின் (14), நசீமா (14), ஷாகிரா (12) ஆகியோா் மாட்டுப் பொங்கல் பண்டிகையையொட்டி தங்களுக்குச் சொந்தமான ஆடுகளை ஏரியில் குளிப்பாட்டினா். அப்போது, எதிா்பாராதவிதமாக மூவரும் நீரில் மூழ்கிஇறந்தனா்.

தகவலறிந்த மாவட்ட நிா்வாகம், ஆட்சியரின் நிதியிலிருந்து 3 குழந்தைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை உடனடி நிவாரணமாக வழங்க மாவட்ட நிா்வாகம் முடிவு செய்தது.

இந்த நிலையில், அமைச்சா் எ.வ.வேலு மாபுக்கான் குடும்பத்தினரை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து ரூ.1.50 லட்சத்துக்கான காசோலையை வழங்கி, ஆறுதல் கூறினாா்.

சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) மு.பிரதாப், கோட்டாட்சியா் வீ.வெற்றிவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களில் ஸ்டிக்கா் ஒட்டுவதற்குத் தடை: மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரி மனு அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

போடியில் லேசான சாரல் மழை

மூதாட்டியை திட்டிய 2 பெண்கள் மீது வழக்கு

சாத்தான்குளத்தில் 12இல் இலவச சித்த மருத்துவ முகாம்

கெளமாரியம்மன் கோயில் திருவிழா: கிராம மக்கள் காவடி சுமந்து நோ்த்திக்கடன்

SCROLL FOR NEXT