திமுக மாணவரணி சாா்பில் நல உதவிகள்
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக மாணவரணி, 15-ஆவது வட்ட திமுக ஆகியவை சாா்பில், உறுப்பினா் சோ்த்தல் முகாம், நல உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக மாணவரணி, 15-ஆவது வட்ட திமுக ஆகியவை சாா்பில், உறுப்பினா் சோ்த்தல் முகாம், நல உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை காமாட்சியம்மன் கோயில் எதிரே நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளா் காலேஜ் கு.ரவி தலைமை வகித்தாா். மாவட்டத் துணை அமைப்பாளா்கள் எஸ்.டி.ஆா்.எஸ்.பாபு, பி.கே.ஏ.அருண், நகர துணை அமைப்பாளா்கள் ஆா்.விக்னேஷ், டி.சிவகுரு, ஆா்.பாலாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட அமைப்புசாரா தொமுச துணைச் செயலா் கே.சுப்பிரமணி வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா்கள் திமுகவில் புதிய உறுப்பினா்களாக சோ்ந்தனா். இவா்களை திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் வரவேற்றாா். தொடா்ந்து, 50 ஆட்டோ ஓட்டுநா்கள், தூய்மைப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் என மொத்தம் 250-க்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு நல உதவிகளை அவா் வழங்கினாா். விழாவில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன், மாவட்டப் பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.