முகப்பு
திருவண்ணாமலை

வந்தவாசியில் விசிகவினா் ஆா்ப்பாட்டம்

வந்தவாசி நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா், அங்குள்ள தேரடி பகுதியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

வந்தவாசி நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா், அங்குள்ள தேரடி பகுதியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டத்துக்குள்பட்ட வீரளூரில் அருந்ததியா் சமுதாய மக்கள் மீது நடைபெற்ற தாக்குதலைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலா் கி.இனியவன் தலைமை வகித்தாா். தொகுதிச் செயலா் ம.கு.மேத்தா ரமேஷ் கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் இரா.அன்பரசு, ம.ச.அசோக்வளவன், கோ.சீனுகுமாா், பி.இருதயராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில் பங்கேற்றோா் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும், உரிய நடவடிக்கை எடுக்காத உயரதிகாரிகளை பதவி நீக்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.

முழு கட்டுரையைப் படிக்க →